பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மானு பாகெர்

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மானு பாகெர்
Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அந்த பதிவில், " இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.

இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு மானு பாகெர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மானு பாகெர் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்கள் வாழ்த்துக்களுக்காக மிக்க நன்றி பிரதமர் நரேந்திர மோடி. அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகப்பெரிய விஷயம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com