17 மாதத்துக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
17 மாதத்துக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா
Published on

புதுடெல்லி:

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.

விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com