உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை சந்தித்த மணிஷ் சிசோடியா

திகார் சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் மறுத்து இருந்தது.இதை தொடர்ந்து மணிஷ் சிசோடியா இன்று காலை 10 மணியளவில் திகார் சிறையில் இருந்து புறப்பட்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை சந்தித்த மணிஷ் சிசோடியா
Published on

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் மறுத்து இருந்தது.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை சந்திக்க சிசோடியா டெல்லி கோர்ட்டில் அனுமதி கேட்டார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 6 மணி நேரம் சந்திக்க அவருக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து மணிஷ் சிசோடியா இன்று காலை 10 மணியளவில் திகார் சிறையில் இருந்து புறப்பட்டார். வீட்டுக்கு சென்று அவர் மனைவியை சந்தித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com