தலைதூக்கிய சந்தேகம்: வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மனைவி அடித்துக் கொலை

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தகராறுகொலை செய்தபின் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்
தலைதூக்கிய சந்தேகம்: வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மனைவி அடித்துக் கொலை
Published on

கேரள மாநிலம், திருச்சூர் விய்யூர் அருகே மனைவியுடன் வசித்து வந்தவர் உன்னி கிருஷ்ணன் (வயது 56). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 8-ந்தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு 46 வயதான தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனைவியுடன் சண்டைபோட்டு வந்த அவர், திடீரென கொடூரமாக தாக்கி மனைவியை கொலை செய்துள்ளார். கொலை செய்ததும், தப்பி ஓட நினைக்கால் நேராக காவல் நிலையம் சென்ற சரணடைந்துள்ளார்.

மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com