மெசேஜ் அனுப்பிய தாய்: சந்தேகத்தால் பெற்ற தாயை வெட்டி சாய்த்த மகன்

தாய் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறுமற்றொரு நபருக்கு மெசேஜ் அனுப்பியதால், வெட்டிக்கொலை செய்துள்ளார்
மெசேஜ் அனுப்பிய தாய்: சந்தேகத்தால் பெற்ற தாயை வெட்டி சாய்த்த மகன்
Published on

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சந்தேகத்தின் உச்சிக்கே சென்ற 17 வயது மகன், தனது தாயை கோடறியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது மகனுக்கு, அவனுடைய தாயாரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 35 வயதான தனது தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தாயாருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவனது தாயார், அவருடைய செல்போனில் இருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, தனது தாயாரின் மீது சந்தேகப்பார்வை வைத்துள்ள நிலையில், தன்முன்னே மெசேஜ் அனுப்பியது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கோபம் அதிகரிக்க அருகில் இருந்த கோடறியால், தாய் என்று கூட பார்க்காமல் வெட்டி சாய்த்தார். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்கடர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அருகில் இல்லை.

இந்திய தண்டனை சட்டம் 302-வது (கொலை) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com