

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ராம்குண்ட் மற்றும் திரிம்பகேஷ்வரில் கும்பமேளா விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்காக துறவிகள் மற்றும் சமய அமைப்புகள் தங்குவதற்கான தற்காலிக குடியிருப்புப் பகுதியாக சாது கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அதை கையகப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 191.21 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நாசிக்-திரிம்பகேஷ்வர் கும்பமேளா ஆணையத்திற்கு ரூ.2,267 கோடியை அனுமதித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும் துறவிகள் தங்கும் சாது கிராமத்தில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு எந்தப் பணிக்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசாணை தெரிவித்துள்ளது.
அதன் அசல் தொகையையோ அல்லது வட்டியையோ வேறு செயல்களுக்கு பயன்படுத்துவது கடுமையான நிதி முறைகேடாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேலாக மாநில அரசால் கூடுதல் மானியம் வழங்கப்படாது எனவும் அந்த அரசாணை தெரிவித்துள்ளது.