அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்

இந்திய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பொறியாளர் என்ற பெருமையை மனோஜ் பாண்டே பெறுகிறார்.
மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் முகுந்த் நரவானே இந்த மாத இறுதியில் (ஏப்ரல் 30) ஓய்வு பெற உள்ளார். அவருடைய ஓய்விற்கு பிறகு மனோஜ் பாண்டே மே 1ம் தேதி ராணுவ தளபதியாக பதவியேற்க உள்ளார். 

இதன்மூலம் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பொறியாளர் என்ற பெருமையை மனோஜ் பாண்டே பெறுகிறார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே, டிசம்பர் 1982-ல் ராணுவத்தின் பொறியாளர்கள் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com