ED விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு.
ED விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்
Published on

ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவருடன், மூத்த மகளும் ராஜ்யசபா எம்பி-யுமான மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

லாலு பிரசாத்-ன் விசாரணைக்கு முன்னதாக ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மிசா பார்தி, "அமலாக்கத் துறை விசாரணைக்கு நாங்கள் வருவது புதிதல்ல. பாஜக-வின் பின்னால் இல்லாதவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்பட்டு வருகிறது. விசாரணை அமைப்புகள் எப்போதெல்லாம் எங்களை அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com