நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஆதரவு திரட்டிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணையதளம் முடக்கம்

தங்கள் மகன் இந்தியா வந்தால் அவன் கொலை செய்யப்படலாம் என அபிஜித் உடைய பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஆதரவு திரட்டிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணையதளம் முடக்கம்
Published on

வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியது சர்ச்சையானது.

தான் அனைத்து இளைஞர்களையும் அப்படி சொல்லவில்லை என அவர் விளக்கமளித்தபோதும் நீட் வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் வேலையின்மை நாட்டின் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் கரப்பான்பூச்சு ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டியாக ஒரு கட்சி தொடக்கப்பட்டது. அதன் சமூக வலைதள கணக்குகளில் கொடிக்கணக்கானோர் இணைந்தனர்.

இடையில் அக்கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் மற்றொரு பக்கம் உருவாக்கபட்டது.

அதன் இன்ஸ்டாகிராம் கணக்கில் பாஜகவின் இன்ஸ்டா கணக்கை விட அதிகமான பின்தொடர்பவர்கள் எட்டிய நிலையில் அந்த கணக்கும் ஹேக் செய்யப்பட்டதாக கட்சியை உருவாக்கிய இளைஞர் அபிஜித் தீப்கே குற்றம்சாட்டினார்.

இவர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வருகிறார். அவருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.

இந்த சூழலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணையத்தளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மெந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் படிவத்திற்கு அந்த இணையதளத்தில் ஆதரவு சேகரிக்கப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த சூழலில் அந்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டா கணக்கு மீட்கப்பட்டதாகவும் அதில் தற்போது சுமார் 22 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளதாகவும் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

தங்கள் மகன் இந்தியா வந்தால் அவன் கொலை செய்யப்படலாம் என அபிஜித் உடைய பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com