நீதிபதிகள் ஆர் மகாதேவன், என் கோடீஸ்வர் சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்

இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளியிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை.
நீதிபதிகள் ஆர் மகாதேவன், என் கோடீஸ்வர் சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்
Published on

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர் மகாதேவன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 16 ஆம் தேதி என் கோடீஸ்வர் சிங் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற கொலிஜியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என் கோடீஸ்வர சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர் மகாதவேன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். இதன் காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடகள் முழுமை பெற்றுள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com