அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: போர்ச்சுக்கல் மதுபான கடையில் விற்கப்பட்ட மும்பை பெண்

போர்ச்சுக்கல் நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில், காசாளர் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியுள்ளனர்.
Job Scam Abroad
வெளிநாட்டு வேலை மோசடி: மும்பை பெண் போர்ச்சுக்கல் மதுபான கடையில் விற்கப்பட்ட அதிர்ச்சி
Published on

புனேவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நாக்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி, போர்ச்சுகலில் உள்ள ஒரு பீர் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது.

ஆள் சேர்ப்பு நிறுவனம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம், இன்ஸ்டாகிராம் மூலம் ‘வி மைக்ரேட்’ என்ற ஆலோசனை நிறுவனம் வெளிநாட்டில் சேலை வாங்கி தருவதாக ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

அப்போது அந்த நிறுவனத்தை 28 வயது பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைக்காக தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அவருக்கு மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் போர்ச்சுக்கல் நாட்டில், காசாளர் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து விசா மற்றும் இதர ஆவணங்கள் என்ற பெயரில், அந்த பெண்ணிடுமிருந்து மொத்தம் 11 லட்சம் ரூபாயை தவணை முறையில் பறித்துள்ளனர்.

மதுபான கடையில் வேலை

பின்னர் அந்த பெண் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றபோது, அங்குள்ள ஏஜென்டுகள் அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு, இரண்டு நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை ஒரு மதுபான கடை உரிமையாளரிடம் விற்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை வேலை செய்ய கட்டாயப்படுத்தி கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த பெண் மோசடிக்காரர்களிடம் தனது பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் அதற்கு மேலும் பணம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் லிஸ்பன் நாட்டிற்கு தப்பிச் சென்று, பின்னர் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு தப்பி சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் கத்தார் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் புனே காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணை

அப்போது வி மைக்ரேட் நிறுவனத்தின் மேனேஜர் உள்பட எட்டு பேர் மீது ஆட்கடத்தல், மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், புனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com