ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு முதன்முறையாக பெண் துணை வேந்தர் நியமனம்

மகாராஷ்டிராவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சாந்திஸ்ரீ துலிப்புடி நியமிக்கப்பட்டுள்ளது.
சாந்திஸ்ரீ
சாந்திஸ்ரீ
Published on

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் முதல் பெண் துணை வேந்தராக சாந்திஸ்ரீ துலிப்புடி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ளார்.

இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். சர்வதேச உறவுகள் குறித்த படிப்பில் எம்பில், பிஹெச்டி படித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாந்திஸ்ரீ நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், அவரது பதவிக்காலம் ஐநது ஆண்டுகள் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com