ஜார்க்கண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
ஜார்க்கண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.

இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமுற்றவர்களை மீட்ட அதிகாரிகள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் ரெயிலின் பத்து பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com