

பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் உள்ள மா வைஷ்ணோ நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு பிற்பகலில் முகத்தில் துணியை சுற்றிக்கொண்டு வந்த இரண்டு சிறுமிகள் சாதாரண வாடிக்கையாளர்கள் போல் ஊழியர்களிடம் நடித்தனர்.
இதையடுத்து நகைக்கடையில் இருந்த உரிமையாளர் ராஜேஷ் குமாரிடம் தங்க காதணிகளை காட்டுமாறு கேட்டனர்.
பின்னர் கடைக்காரர் நகைகளை வெளியே எடுத்தபோது, அந்த பெண்ணில் ஒருவர் தான் கொண்டுவந்த மிளகு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து, கடைக்காரரின் முகத்தில் அடித்தார்.
இதையடுத்து கடைக்காரர் வேகமாக நீரை எடுத்து முகத்தை கழுவி விட்டு, கடையை விட்டு வெளியே ஓடி, உடனடியாக ஷட்டரை கீழே இழுத்து கதவை பூட்டினார்.
இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர்கள் அபாய ஒலி எழுப்பியதால், அங்கிருந்த உள்ளூர் மக்கள் கடையின் முன்பு கூடினர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாட்னா காவல் துறையினர், கடைக்குள் நுழைந்து இரண்டு சிறுமிகளையும் விசாரனைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.