ஜனசேனா கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர் லிங்கமனேனி ரமேஷ்!

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8 கடைசி நாள்; தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் விறுவிறுப்பாகும் தேர்தல்!
LingamaneniRamesh, PawanKalyan,
LingamaneniRamesh, PawanKalyan,
Published on

ஆந்திர பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஜனசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக லிங்கமனேனி ரமேஷ் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாகவே ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இந்த செய்தியை அறிவிருத்திருந்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லிங்கமனேனி ரமேஷ், "எனக்கு இந்த உன்னதமான வாய்ப்பை வழங்கிய ஜனசேனா கட்சித் தலைவரும், மாண்புமிகு துணை முதல்வருமான பவன் கல்யாண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அதேபோல் எனக்கு ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் எனது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

லிங்கமனேனி ரமேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜனசேனா கட்சி மற்றும் பவன் கல்யாணுடன் இணைந்து பயணித்து வருகிறார்.

2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜனசேனா கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தபோதும், சோர்ந்து போகாமல் கட்சியின் தலைமைக்கு உறுதுணையாக நின்றவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com