திடீர் உடல்நலக் குறைவு: பி.ஆர்.எஸ். கவிதா மருத்துவமனையில் அனுமதி

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் உள்ளார்.முன்னாள் முதல் மந்திரி மகளான கவிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் உடல்நலக் குறைவு: பி.ஆர்.எஸ். கவிதா மருத்துவமனையில் அனுமதி
Published on

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com