Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு! IT'S A Victory OF DEMOCRAZY என ட்வீட்!

இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது.
SonamWangchuk
Published on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்'.

இப்போராட்டத்தில் முன்னணியில் நின்று குரல் கொடுத்த Gen Z இளைஞர்களுக்கு, சமூக ஆர்வலர் 'சோனம் வாங்சுக்' தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா:

நீட் தேர்வு கசிவு விவகாரத்தில் மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார். "மாணவர்களின் எதிர்காலம், நாட்டின் ஒற்றுமை மற்றும் கல்வி முறையின் மீதான நம்பிக்கையைக் காக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Gen Z இளைஞர்களின் தீவிரப் போராட்டம்:

டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள் தீவிர முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வந்தன. கல்வி அமைச்சரின் ராஜினாமா, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

சோனம் வாங்சுக் வாழ்த்து:

மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 26 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com