விமானத்தில் கேக் பெட்டியில் மறைத்து அரிய வகை பல்லிகள் கடத்தல்

பல்லிகளை கடத்தி வந்த 2 பயணிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தாய்லாந்து நாட்டில் இருந்து நீல நாக்குக் கொண்ட பள்ளிகளை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.
விமானத்தில் கேக் பெட்டியில் மறைத்து அரிய வகை பல்லிகள் கடத்தல்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத்துறை மற்றும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது 2 பயணிகள் கேக் பெட்டிகளை கொண்டு வந்தனர். பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கேக் பெட்டியை திறந்து பார்த்தனர். பெட்டிகளில் அரிய வகை 6 பல்லிகள் இருந்தன.

பயணிகளிடம் நடத்திய விசாரணையில் தாய்லாந்து நாட்டில் இருந்து நீல நாக்குக் கொண்ட பள்ளிகளை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை மற்றும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் பல்லிகளை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்லிகளை கடத்தி வந்த 2 பயணிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com