6 சர்வதேச இடங்களுக்கு விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்யும் இண்டிகோ

இந்த சேவைகளை மீண்டும் தொடங்க விமான நிறுவனம் தயாராகவே உள்ளது
Indigo Flight
Published on

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஹாங்காங் மற்றும் கிராபி உள்ளிட்ட ஆறு சர்வதேச இடங்களுக்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. சேவை வலையமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

லங்காவி, கிராபி, ஹோ சி மின், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களுக்கான சேவைகளை ஜூலை 1 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், சியாம் ரீப்பிற்கான சேவைகளை ஜூலை 3 முதல் செப்டம்பர் 30 வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

வரவிருக்கும் காலாண்டில் வழக்கமாகவே தேவை குறைவாக இருக்கும் என்பதையும், மிகவும் சவாலான செலவு சூழலையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

சூழல் சீரடையும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து சேவைகளுக்குமான முன்பதிவுகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது. உரிய கால அவகாசத்துடன், திட்டமிட்டதற்கு முன்னதாகவே இந்த சேவைகளை மீண்டும் தொடங்க விமான நிறுவனம் தயாராகவே உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com