இதுவரையிலான எனது வெற்றிகள் அனைத்தையும் இது மிஞ்சும்: கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

கடினமான செஸ் போட்டியில் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியது சவாலாக உள்ளது.
Praggnanandhaa shares about his win over carlsen
Published on

6 வீரர்கள் பங்கேற்ற நார்வே செஸ் போட்டியின் 10-வது மற்றும் கடைசி சுற்று நேற்று நடைபெற்றது.

இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா 9- வது ரவுண்டு முடிவில் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார்.

இந்த தொடரில் அவர் நம்பர் ஒன் வீரரும், 7 முறை உலகப்பட்டத்தை வென்றவருமான கார்ல்சனை 2 முறை வீழ்த்தினார்.

கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா ஜெர்மனி வீரர் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று 18 புள்ளிகள் பெற்றார்.

நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஆர்.பிரக்ஞானந்தா புதிய வரலாறு படைத்தார். முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த், டி.குகேஷ் சாதனை படைத்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது பிரக்ஞானந்தா இணைந்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கூறியதாவது:-

இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக கடைசி இடத்திலிருந்து மீண்டு வந்து, தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்பு இதை நீங்கள் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டீர்கள். இது ஒரு சிறப்பான வெற்றி. மேலும் இதுவரையிலான எனது வெற்றிகள் அனைத்தையும் இது மிஞ்சும்.

இது நிச்சயமாக ஒரு கடினமான தொடர். இந்த தொடர் முழுவதும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நேரப் போராட்டங்களின் போதுகூட, ஆட்டம் எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம்.

கிளாசிக் வடிவிலான போட்டி கடினமானது மற்றும் தலைசிறந்த வீரர்களுக்கு எதிரான சவாலான போட்டி. இந்த குறிப்பிட்ட பிரிவிலும், போட்டியிலும் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்

இவ்வாறு பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com