K9 வஜ்ரா பீரங்கிகளை தயாரிக்க பாதுகாப்புத் துறைக்கு இந்திய ராணுவம் கோரிக்கை

சுமார் 23,000 கோடி ரூபாய் மதிப்பில் 300-க்கும் மேற்பட்ட K9 வஜ்ரா தானியங்கி பீரங்கிகளை கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
K9 வஜ்ரா பீரங்கிகளை தயாரிக்க பாதுகாப்புத் துறைக்கு இந்திய ராணுவம் கோரிக்கை
Published on

இந்திய ராணுவத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பீரங்கிப் படையை நவீனமயமாக்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு முனை மற்றும் சீனாவுடனான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) ஆகிய இரண்டிலும் தொலைதூரத் தாக்குதல் திறனை வலுப்படுத்துவதில் இந்திய ராணுவம் பாதுகாப்பு விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கூடுதலாக சுமார் 23,000 கோடி ரூபாய் மதிப்பில் 300-க்கும் மேற்பட்ட K9 வஜ்ரா தானியங்கி ஹோவிட்சர் பீரங்கிகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் கோரியுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் முன்மொழிவுகளை பாதுகாப்பு கொள்முதல் வாரியத்தின் டிபிபியிடம் இந்த வாரத்தில் இந்திய ராணுவம் கோரிக்கையாக வைக்கப்படவுள்ளது.

அவ்வகையில், தென்கொரியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான ஹன்வா ஏரோஸ்பேஸுடனான தொழில்நுட்பக் கூட்டாண்மையின் கீழ் இந்தியாவில் கே9 வஜ்ரா-டி ஏவுகணையைத் தயாரிக்கும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படும்.

இதன் மூலம் இந்திய ராணுவத்தின் பீரங்கிகளின் மொத்த இருப்பு எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக உயரவுள்ளது.

முன்னதாக சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பில் 100 கே9 வஜ்ரா துப்பாக்கிகளுக்கான முதல் ஒப்பந்தத்தில் இந்தியா 2017-ஆம் ஆண்டு கையெழுத்திட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com