உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி: இந்தியா ஒப்புதல்

QDENGA தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளது.
Drug regulator clears India's first Dengue Vaccine
Published on

டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா அங்கீகாரம்:

இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.

டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் என்ற இந்திய நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கான க்யூடெங்கா என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு செலுத்தும் வகையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.

மேலும் கடந்த காலங்களில் டெங்கு நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில டெங்கு தடுப்பூசிகளை போல் அல்லாமல், தற்போது உருவாக்கப்பட்டுள்ள கியூடெங்கா தடுப்பூசிக்கு, முன் பரிசோதனை தேவையில்லை.

இதன்மூலம் தகுதியுள்ள நபர்கள், தங்களுக்கு முன்பு டெங்கு தொற்று இருந்ததா என முதலில் பரிசோதிப்பதற்கு முன்பு, இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

டெங்கு பரிசோதனை:

இதுகுறித்து மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “க்யூடெங்கா தடுப்பூசி 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில், ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது.

ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கிறது.

டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பசிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன.

உலக சுகாதார அமைப்பு அனுமதி:

டெங்கு காய்ச்சலுக்கு எதிரான இந்த தடுப்பூசியானது, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு கீழே 0.5 மில்லி லிட்டர் அளவுள்ள இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட உள்ளது.

QDENGA தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) முன் தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளது.

மேலும் UNICEF மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) போன்ற உலகளாவிய முகமைகளில் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com