ஆகஸ்ட் 8-ல் 'இந்தியா' கூட்டணி கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு!

இந்தியா கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தவெகவுக்கு அழைப்பில்லை.
ஆகஸ்ட் 8-ல் 'இந்தியா' கூட்டணி கூட்டம்:  மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு!
Published on

டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி, உமர் அப்துல்லா, திருமாவளவன், சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவால் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்தியா கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தவெகவுக்கு அழைப்பில்லை. எம்பிக்களைப் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு என காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் அடுத்த மாதம் தொடங்​கும் நிலையில் அதில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

மேலும் அவர்,"நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் விவாதிப்போம்" என்றார்.

எஸ்.ஐ.ஆர் வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் திருட்டு தொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்ப கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com