புலிகள் சரணாலய பகுதியில் 'செல்பி' எடுத்தவர்களை விரட்டிய யானை கூட்டம்

3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர். அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.
புலிகள் சரணாலய பகுதியில் 'செல்பி' எடுத்தவர்களை விரட்டிய யானை கூட்டம்
Published on

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com