கணவர் மீது வெந்நீரை ஊற்றி சித்ரவதை செய்து கொன்ற மனைவி- மது போதையில் துன்புறுத்தியதால் ஆத்திரம்

ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார்.சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.
கணவர் மீது வெந்நீரை ஊற்றி சித்ரவதை செய்து கொன்ற மனைவி- மது போதையில் துன்புறுத்தியதால் ஆத்திரம்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 39). இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோஹிதி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ஹேமந்த் மது போதைக்கு அடிமையாகியதால் வேலையை விட்டு நின்றார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ரோஹிதி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமந்த் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து ரோஹிதி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான சாய்கிரன் மற்றும் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார்.

நண்பர்கள் வீட்டிற்கு வந்ததும் கணவரின் ஆடைகளை கழற்றி விட்டு தூணில் கயிற்றால் கட்டினார். பின்னர் வெந்நீரை கொதிக்க வைத்து கணவர் உடல் மீது ஊற்றினார்.

இதனால் ஹேமந்த் வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார். பின்னர் கட்டையை எடுத்து வந்து கணவரின் தலை மீது தாக்கினார். இதில் ஹேமந்த் படுகாயம் அடைந்தார்.

தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரோஹிதியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த ரோஹிதி கணவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஹிதி மற்றும் அவரது நண்பர்கள் சாய் கிரண், நவீன் ஆகியவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com