கேரளாவில் நேரு கோப்பை போட்டியில் சீறிப்பாய்ந்த படகுகள் - பொதுமக்கள் உற்சாகம்

19 சுண்டன் வள்ளங்கள் உள்பட 72 வள்ளங்கள் போட்டியில் பங்கேற்றன.போட்டியில் வெற்றி பெற்ற படகுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கேரளாவில் நேரு கோப்பை போட்டியில் சீறிப்பாய்ந்த படகுகள் - பொதுமக்கள் உற்சாகம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி 69-வது நேரு கோப்பை படகுப்போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

9 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. 19 சுண்டன் வள்ளங்கள் உள்பட 72 வள்ளங்கள் போட்டியில் பங்கேற்றன. வீரர்கள் துடுப்பு போட படகுகள், ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதனால் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வேகமாக துடுப்புகளை செலுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற படகுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com