டெல்லியில் 16 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் காயம்

சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டெல்லியில் 16 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் காயம்
Published on

டெல்லியின் ஜகத்புரி பகுதியில் தொழிலதிபரின் 16 வயது மகன் கார் ஓட்டி சென்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.

காரின் உரிமையாளரான சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா நகரின் காலை உணவு சாப்பிட வந்ததாகவும் அந்த இடத்தில் தள்ளுவண்டி மீது கார் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தூய்மை பணியாளர் மீது மோதியது. பின்னர் சாலையில் நடந்து கொண்டிருந்த 3 பேர் மோதியது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com