

மேற்கு வங்கம் மாநிலத்தில் முதன்முறையாக பாஜக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்றார்.
பதவி ஏற்றதும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மதராஸாக்களில் வந்தே மாதரத்தின் முழுப் பாடல் பள்ளி தொடங்குவதற்கு முன் காலை assembly-யில் பாடப்பட வேண்டும் உத்தரவிடப்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கவலை தெரிவித்துள்ளது. வந்தே மாதரம் தொடர்பான அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அல்லது இதில் இருந்து முஸ்லிம் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சுவேந்து அதிகாரி “நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால், நீங்கள் வந்தே மாரதம், ஜன கண மன சொல்ல வேண்டும். ஜனவரி 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) ஆகியவற்றிக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என்றார்.
மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இதுவே இந்தியப் பண்பாடு. இதுவே சனாதனப் பண்பாடு. இந்தியா, 'இந்துஸ்தான்' மற்றும் 'இந்தியா' ஆகிய இரு பெயர்களாலும் அறியப்படுகிறது. இந்நாடு வேறு எவருடைய கைகளுக்கும் செல்லாது எனக் குறிப்பிட்டுள்ளார்.