பாத்ரூமில் ரகசிய கேமரா.. இளம்பெண் அதிர்ச்சி.. வீட்டு உரிமையாளர் மகன் அதிரடி கைது

ரகசிய கேமரா பொருத்தியதாக வீட்டு உரிமையாளர் மகன் கைது. வீட்டில் இருந்த கனெக்டெட் சாதனங்களைச் சரிபார்த்துள்ளார்.
பாத்ரூமில் ரகசிய கேமரா.. இளம்பெண் அதிர்ச்சி.. வீட்டு உரிமையாளர் மகன் அதிரடி கைது
Published on

டெல்லி ஷகர்பூர் பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண் ஒருவரின் படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்தப் பெண் டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கரண் அந்த பெண் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன். தான் வசித்து வந்த வீட்டு சாதனங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கேமராக்களை அந்த பெண் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணை செய்த காவல் துறையினர் வீட்டு உரிமையாளர் மகன் கரணை கைது செய்தனர்.

யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண், தனது வாட்ஸ்அப் கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டு சந்தேகமடைந்தார். இதைத் தொடர்ந்து தன் வீட்டில் இருந்த கனெக்டெட் சாதனங்களைச் சரிபார்த்துள்ளார்.

அப்போது, அறியப்படாத லேப்டாப்பில் இருந்து அவளது கணக்கு பயன்படுத்தப்பட்டதைக் கண்டாள். இது அவளது குடியிருப்பைத் தேடத் தூண்டியது, அவளது குளியலறையின் பல்ப் ஹோல்டருக்குள் ஸ்பை கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டார். அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினார்கள். சோதனையின் போது, அவரது படுக்கையறையின் பல்ப் ஹோல்டரிலும் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, கேமராக்களை பொருத்தியதை கரண் ஒப்புக்கொண்டார். மேலும் கரண் வசமிருந்த ஒரு ஸ்பை கேமரா மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அடங்கிய இரண்டு லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com