அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்து

இந்திய விமானப்படை விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்து
Published on

அசாமில் உள்ள ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன்-32 ரக விமானம் ராணுவ வளாகத்திற்குள் தரையிறங்கியது.

அந்த விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இது தொடர்பாக விமானப்படைத் தள வளாகத்திற்குள் உடனடியாக அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் உயிரிழப்புகள், சேதம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ஜோர்ஹாட் - இன்று இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் விரிவான தகவல்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com