கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக வருத்தப்படுகிறேன் - அன்னா ஹசாரே

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியதுஅமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது
கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக வருத்தப்படுகிறேன் - அன்னா ஹசாரே
Published on

நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

"என்னுடன் இணைந்து மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் கைதுக்கு அவரே தான் காரணம்" என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிரான லோக்பால் போராட்டத்தின் போது அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின்பு கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com