பைக் ஓட்டிக்கொண்டே லேப் டாப்பில் வேலை பார்த்த இளைஞர் - வீடியோ வைரல்

கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறிய ஊழியர்களின் அவசர புத்தியை இடித்துரைத்து வருகின்றனர்.
பைக் ஓட்டிக்கொண்டே லேப் டாப்பில் வேலை பார்த்த இளைஞர் - வீடியோ வைரல்
Published on

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் லேப்டாப்பில் வேலை செய்தவாறு சாலையில் பைக்கில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ

அந்த வீடியோவில் ஐதராபாத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அந்த இளைஞர் ஒரு கையில் பைக்கை ஓட்டிக்கொண்டு முன்னே எரிபொருள் டேங்கின் மேல் லேப் டாப்பை திறந்து வைத்து அதில் பணி செய்தபடி ஆபத்தான முறையில் பயணிப்பது பதிவாகி உள்ளது.

சாலையில் கவனம் செலுத்தாமல், லேப்டா ப்பை பார்த்துக் கொண்டு செல்லும் அவரின் அலட்சியப் போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர்.

குறிப்பாக கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறிய ஊழியர்களின் அவசர புத்தியை இடித்துரைத்து வருகின்றனர்.

விதி

போக்குவரத்து விதிகளின்படி, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் அல்லது லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும்.

இந்த வீடியோவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞரின் பைக்கின் பதிவு எண்ணைக் கண்டறிந்து அவருக்கு அபராதம் விதித்து தற்காலிகமாக லைசன்ஸ் ரத்து செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பரிசீலித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com