

ஹைதராபாத்தின் மியாபூரில் 37 வயதுடைய இஷா சாஹு எனும் மென்பொருள் பொறியாளர் தனது குழந்தையுடன் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இப்பெண் தனது ஆறு மாதக் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இருப்பினும் அவரது குழந்தை சிறு காயங்களுடன் அதிசயமாக உயிர் தப்பியது.
கீழே விழும்போது தாயின் பிடியிலிருந்து நழுவிய நிலையில் அக்குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. அப்பகுதி மக்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் மருத்துவ சிகிச்சைக்காக அக்குழந்தையை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையின் நிலைமை அபாயமின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காவல்துறையின் முதற்கட்ட தகவல்களின்படி அப்பெண் கடந்த பல மாதங்களாக தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு வழிவகுத்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொரப்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.