மகாராஷ்டிராவில் மசூதியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - ஐதராபாத் எம்.பி. ஒவைசி கண்டனம்

இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது.டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மசூதியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் -  ஐதராபாத் எம்.பி. ஒவைசி கண்டனம்
Published on

ஒரு கும்பல் மசூதியை இடிக்க முயற்சிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது. கஜாபூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மசூதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மசூதியை ஒரு கும்பல் இசைக்கும் அந்த வீடியோவை ஐதராபாத் எம்.பி ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மகாராஷ்டிரா மாநில அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஒவைசி பகிர்ந்த வீடியோவில், "மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு கும்பல் மசூதியின் மேல் ஏறி, காவிக்கொடியை நட்டு, மசூதியை இடிக்க முயன்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com