உணவு தாமதமானதால் கோபம் - மனைவியின் தலையை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கணவர்!

சிறிது நேரத்தில் உணவு தயாராகிவிடும் என மனைவி கூறியதால் ஆத்திரமடைந்து கொலை செய்துள்ளார்
Bihar Murder
Published on

பீகார் மாநிலம் ஜெஹனாபாத்தை சேர்ந்த குணால் குமார், வயது 25 மனைவி அன்ஷூ தேவியை உணவு தாமதமான கோபத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

குணால் குமார் வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதையில் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டது.

இந்த நிலையில் நேற்று குணால் குமாரின் குடும்பத் தினர் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் குடும்பத்தினருக்காக மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் வெளியே சென்ற குணால் குமார் நண்பர்களுடன் மது குடித்தார்.

போதை தலைக் கேறியதும் அவருக்கு பசி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி அன்ஷூ தேவியி டம் உடனே சாப்பாடு வேண்டும் என கேட்டார். அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் தயாராகி விடும் என கூறினார்.

இதனைக் கேட்டதும் குணால் குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் தாமதமாக சமையல் செய்து கொண்டி ருக்கிறாய் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மனைவி சிறிது நேரத்தில் உணவு தயாராகி விடும் என தெரிவித்தார்.

இதனைக் கேட்டதும் குணால் குமாருக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

கோடாரியால் கொடூர கொலை

வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து மனைவியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். அவரது மனைவி தன்னை எதுவும் செய்து விட வேண் டாம் என கெஞ்சினார். இருப்பினும் கோடாரியால் மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் தலை துண்டித்து 10 அடி தூரத்தில் விழுந்தது.

வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சிய ளித்தது. இறந்த மனைவியின் தலையை ஒரு கயிற்றில் கட்டி வீட்டின் முன்பாக உள்ள மரத்தில் தொங்க விட்டார். எங்கும் தப்பித்து செல்லாமல் மரத்துக்கு அடி யிலேயே அமர்ந்திருந்தார்.

போலீஸ் நடவடிக்கை

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்ஷூ தேவியின் தலை யையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குணால் குமாரை கைது செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com