மோடி பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை வந்தது எப்படி?- வைரல்

மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மோடி பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை வந்தது எப்படி?- வைரல்
Published on

நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த மர்ம விலங்கு சிறுத்தையா? பூனையா? என்ற சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போது இந்த மர்ம விலங்கு எப்படி வந்து என்று கேள்வி எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com