ஹோலி : ஆபாச நடனத்தை கண்டித்த இளைஞர் கல்லால் அடித்து கொலை

ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஹோலி : ஆபாச நடனத்தை கண்டித்த இளைஞர் கல்லால் அடித்து கொலை
Published on

உத்தரபிரதேச மாநிலம் பைரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹோலி' கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் வாலிபர்கள் பேண்ட்-ஐ கழற்றி நிர்வாணமாக நடனம் ஆடினார்கள்.

இந்த ஆபாச நடனத்தை அப்பகுதியை சேர்ந்த சூரஜ்பால் (வயது 35) என்பவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்

இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச நடனம் ஆடிய தட்டிக்கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com