இஸ்லாமிய பெண்ணுடன் உணவு சாப்பிட்டதால் ஆத்திரம்- இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

தாக்குதல் சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வீடியோ ஆதாரத்தைக் கொண்டு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய பெண்ணுடன் உணவு சாப்பிட்டதால் ஆத்திரம்- இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
Published on

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் ஒருவருடன் உணவுக் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இஸ்லாமிய பெண் ஹிஜாப்புடன் இருப்பதையும் உடன் இந்து மதத்தை சேர்ந்த நபர் இருப்பதையும் கண்டு ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நண்பரை காப்பாற்ற முயன்ற பெண், அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர், அவரை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இருப்பினும் இளைஞரை அடித்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com