அமலாக்கத்துறை கைது செய்த ஹேமந்த் சோரனுக்கு 5 நாள் காவல்

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி.சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டம்.
அமலாக்கத்துறை கைது செய்த ஹேமந்த் சோரனுக்கு 5 நாள் காவல்
Published on

நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.

நேற்று அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சோரணை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஹேமந்த் சோரணை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து அவரிடம் சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com