7-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

சிருஷ்டி தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார்.
7-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனா. இவரது மனைவி சுமா.

இந்த தம்பதியின் மகள் சிருஷ்டி (வயது 13). இவர் தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி சிருஷ்டி பள்ளிக்கூடத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனே அப்பகுதி மக்கள் சிருஷ்டியை மீட்டு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்துபோனதும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com