பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி: அரியானா அரசு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.இதில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் உயிரிழந்தார்.
பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி: அரியானா அரசு
Published on: 

சண்டிகர்:

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.

இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வினய் நர்வால் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com