அரியானாவில் சோகம் - விநாயகர் சிலையை கரைக்க சென்று நீரில் மூழ்கி 4 பேர் பலி

கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.விநாயகர் சிலையை நேற்று இரவு சிலர் கால்வாயில் கரைக்க சென்றனர்.
அரியானாவில் சோகம் - விநாயகர் சிலையை கரைக்க சென்று நீரில் மூழ்கி 4 பேர் பலி
Published on

சண்டிகர்:

நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று இரவு விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் 4 இளைஞர்களை மீட்டனர். ஆனால், நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com