கற்பழித்ததாக பொய் வழக்குகள்... 8 ஆண்களை மிரள வைத்த பெண் கைது

கைது செய்யப்பட்ட பெண்ணின் தாயும், மற்றொரு ஆணும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றப்பிரிவு துணை கமிஷனர் பிரீத் பால் சிங் சங்வான் தெரிவித்தார்.
கைது
கைது
Published on

குருகிராம்:

டெல்லி அருகே உள்ள குருகிராம் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், பல்வேறு ஆண்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தனது தேவைக்கு பணம் பெற்றுள்ளார். சிலரிடம் மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்காத 8 ஆண்கள் மீது கற்பழிப்பு வழக்கும் தொடர்ந்திருக்கிறார். 

இந்த நிலையில், பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்ததாக அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், 8 பேர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்து, வழக்கு பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் தாயும், மற்றொரு ஆணும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், தலைமறைவான அவர்களை தேடி வருவதாகவும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பிரீத் பால் சிங் சங்வான் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதமே அந்த பெண் மீது சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையமும் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து, சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கும்படி வலியுறுத்தியது. இப்போது, கர்னாலைச் சேர்ந்த ஒரு பெண் நியூ காலனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com