கர்நாடகாவில் கூடுதல் மதுக்கடை திறக்க அரசு முடிவு

1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் கூடுதல் மதுக்கடை திறக்க அரசு முடிவு
Published on

பெங்களூரு:

கர்நாடக கலால் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 379 எம்.எஸ்.ஐ.எல்., மதுக்கடைகளை புதிதாக ஏலம் விடுவது, உரிமம் புதுப்பிப்புக்கு 4 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது.

அதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் செய்வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்தில் மதுபான கடை திறக்க கலால் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, 3 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உரிமம் வழங்குவது என மாற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பொதுவாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 5 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடைகள் திறக்கலாம் என உத்தரவு உள்ளது. இதை மனதில் வைத்து, 1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

இனிமேல் 3 ஆயிரம் மக்கள் தொகை என கொண்டு வந்தால், பல கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக கடைகள் திறக்கப்படும். அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com