தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் கிடைக்குமா?

ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் கிடைக்குமா?
Published on

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ந்தேதி இரவு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடிகை ரன்யா ராவ், தருண்ராஜு ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல், நடிகை ரன்யா ராவ் தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீது நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com