கண்ணாடியில் திடீர் விரிசல்: டெல்லி ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறவை மோதியதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து இன்று மாலை டெல்லி நோக்கி 180 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்படது.

உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமான பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பறவை மோதியதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விமானத்தில் விரிசல் ஏற்பட்ட கண்ணாடி மாற்றப்பட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com