

கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சராக பரமேஸ்வரா பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள லோக்பவனில் நடந்தது. டி.கே.சிவக்குமாருடன் 14 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில்,கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றப்பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கர்நாடகாவில் முதுகலை பட்டதாரிகள் வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டணமில்லாத பேருந்து வசதி. எவ்வித கட்டணமும் இன்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் விலையின்றி பயணிக்கலாம் கட்டணமில்லாத பேருந்து சலுகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.