வரலாற்றில் முதல்முறையாக குருவாயூர் கோவிலில் இன்று 354 திருமணங்கள்

கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.
வரலாற்றில் முதல்முறையாக குருவாயூர் கோவிலில் இன்று 354 திருமணங்கள்
Published on

கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏராளமானோர் திருமணம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று 354 திருமணங்கள் நடைபெற்றன. குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.

கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.

இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமணங்கள் தொடங்கின.

X

Maalai Malar
www.maalaimalar.com