சாப்பாட்டால் சண்டை - சம்பவம் செய்த விருந்தினர்கள் : வீடியோ வைரல்

அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.
சாப்பாட்டால் சண்டை - சம்பவம் செய்த விருந்தினர்கள் :  வீடியோ வைரல்
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.

அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர். 

இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com