விரைவு ரெயிலில் தீ விபத்து - கீழே குதித்து தப்பிய பயணிகள்

ரெயிலில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடை பெறுவதாக நந்துர்பார் ரெயில் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காந்திதாம்-பூரி விரைவு ரயிலில் தீ விபத்து
காந்திதாம்-பூரி விரைவு ரயிலில் தீ விபத்து
Published on

மும்பை:


மகாராஷ்டிரா மாநிலம்  நந்துர்பார் ரெயில் நிலையத்திற்குள் இன்று காலை வந்து கொண்டிருந்த காந்திதாம்-பூரி விரைவு ரெயிலில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. அந்த ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட சொகுசுப் பெட்டி ஒன்றில் புகை சூழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர் அவர்களில் சிலர் ரெயிலில் இருந்து வெளியே குதித்தனர். விரைவு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. 

தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீப்பிடித்த சொகுசு  பெட்டி  அந்த ரெயிலில் இருந்து கழட்டி விடப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரெயில் நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தீவிபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். தீ விபத்தால் நந்துர்பார் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com